அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு: அரசு உறுதி!

  • February 15, 2026
  • 0 Comments

“தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிச்சயம் தீர்வு காணப்படும். புதிய அரசமைப்புக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் undaralingam Pradeep தெரிவித்தார். “ இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்துக்காக தீர்வை கொண்டுவருவதைவிட நிலையான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஜனரஞ்சக முடிவுகளைவிட,  அனைத்து மக்களும் ஏற்கும் முடிவாக அது அமைய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் […]

செய்தி

பங்களாதேஷின் புதிய பிரதமர் 17 ஆம் திகதி பதவியேற்பு: 13 நாடுகளுக்கு அழைப்பு!

  • February 15, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் புதிய பிரதமராக பி.என்.பி. BNP கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் tarique rahman நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கவுள்ளார். நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இருளில் இருந்து ஒளியைத் தேடும் பயணம் : சஜித்தின் மகா சிவராத்திரி வாழ்த்து!

  • February 15, 2026
  • 0 Comments

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களுக்கு  மகா சிவராத்திரி வாழ்த்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார். இருளில் இருந்து ஒளியைத் தேடும் ஒரு ஆன்மீகப் பயணம் என்றும், வழிபாடு, பக்தி மற்றும் தியானம் மூலம் மனதைத் தூய்மைப்படுத்தி அநீதி, அறியாமை மற்றும் ஆணவத்தை வெல்ல தனிநபர்களை வழிநடத்தும் ஒரு உன்னதமான இரவு என்றும் அவர் இந்த விழாவை விவரித்தார். சிவபெருமான் அழிவின் மூலம் புதுமைகளைப் படைப்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​அவர்கள் ஒரு […]

இலங்கை

T-20 உலக கோப்பை போட்டி : அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில்!

  • February 15, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்று (15) மாலை 7:00 மணிக்கு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை போட்டிக்காக விரிவான போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  பொது பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் மாற்று வழிகளை அறிமுகப்படுத்துதல் தொடர்பான அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

போதைப் பொருள் பாவித்து பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி கைது!

  • February 15, 2026
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியொருவர் போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிகளை ஏற்ற வந்த பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் போக்குவரத்து சபையில் கடமையாற்றி வரும் வவுனியா -ஈரப்பெரிய குளம்,வெஹரகம பகுதியில் வசித்து வரும் 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து […]

இலங்கை செய்தி

மொட்டுக் கட்சயிலிருந்து விலகி சர்வஜன அதிகாரத்திற்கு தாவிய தேரர்

  • February 14, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் அவர் சர்வஜன அதிகாரம் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். திஸ்ஸகுட்டி ஆராச்சி அநுராதபுர மக்கள் தொடர்பில் வெளியிடும் சில கருத்துக்களும் அவரது செயற்பாடுகளுமே தாம் கட்சியிலிருந்து விலகக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலை தொடர்ந்தால், அநுராதபுர மாவட்டத்தில் பொதுஜன […]

உலகம்

ஐரோப்பா – அமெரிக்க உறவில் ஏற்பட்ட விரிசல் : மார்கோ ரூபியோ கருத்து!

  • February 14, 2026
  • 0 Comments

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான உறவில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், கடந்த கால மேற்கத்திய தவறுகளை விமர்சித்தார். “விதிகள் சார்ந்த உலகளாவிய ஒழுங்கை மாயை என விமர்சித்த அவர், உலகளாவிய விடயங்களை அணுகுவதில் ஐ.நா தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா தீவிரத்தன்மை மற்றும் பரஸ்பரத்தை எதிர்பார்க்கிறது என்றும் அவர் இதன்போது […]

இலங்கை செய்தி

கொழும்பு – ஜிந்துப்பிட்டியிலும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

  • February 14, 2026
  • 0 Comments

கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நால்வர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி

ரஷ்ய அச்சுறுத்தல் – போராட தயாராகுங்கள் : ஸ்டாமர் அழைப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால், ஐரோப்பா மோதலைத் தேடாவிட்டாலும், போராடத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ( Keir Starmer) தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகும் ரஷ்யாவின் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்படும் என்றும், முழுமையான மற்றும் வலுவான பதில் தேவைப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இன்று இடம்பெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் தலைவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், தேவைப்பட்டால் போராடத் தயாராகவும் இருக்க, […]

இலங்கை செய்தி

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

  • February 14, 2026
  • 0 Comments

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடையாளந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு 7.50 அளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!