பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம்

மத்திய பிலிப்பைன்ஸின் கடற்கரையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நில அதிர்வு அலுவலகம், கடலில் சிறிதளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்ததுடன், லெய்ட், செபு மற்றும் பிலிரான் ஆகிய மத்திய தீவுகளில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து விலகி இருக்கவும், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸின் பன்டாயன் பகுதியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் இடிந்து விழுந்துள்ளது.
பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடதக்கது.