செம்மணி அவலத்தை வார்த்தைகளால் தெறிக்க விட்ட கிளிநொச்சி Rap பாடகர்…

அண்மைக்காலங்களில் இலங்கை கலைஞர்கள் உலகளவில் சாதனைகளை படைத்து வருகின்றார்கள்.
எனினும் எத்தனையோ இளைஞர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சரியான இடம் இல்லாமல் போராடி வருகின்றார்கள்.
ஆனால் இன்று உலகளவில் புகழ்பெற்ற ரப் பாடகர்கள் வரிசையில் ஈழத்து இளைஞர்களும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அந்த வகையில், கிளிநொச்சி மண்ணில் பிறந்த ராப் கலைஞர் sagee, தனது வார்த்தைகளால் ஈழம், மாவீரர், செம்மணி புதைக்குழி தொடர்பான உணர்ச்சிப் பூர்வமான செய்திகளை, தனது ராப் பாடல்கள் டூலம் வெளிப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள செம்மணி புதைகுழி பற்றி இவர் பாடிய பாடல் பலரையும் சிளிர்க்க வைத்துள்ளது.
இதேவேளை, Lee Murali இயக்கத்திலும் கிளிநொச்சி ராப் பாடகர் Sangeethsan இன் இசையிலும் மற்றும் பல கலைஞர்களின் நடிப்பிலும் #CYBER திரைப்படமும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இளைஞர்களுக்கு எம்மால் முடிந்த ஆதரவை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்…