வெள்ளித்திரைக்கு செல்லும் சின்னத்திரை நாயகி… அட இவங்களா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்ற ஹேமா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2இலும் நடித்து வருகின்றார்.
சீரியலில் நடித்து வந்தவர் இப்போது படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு நெல்லை பாய்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும், நாயகியாக ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர்.
ஹேமா இதற்கு முன்னரும் பல படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகியாக நடித்ததில்லை. இந்த நிலையில் ஹேமாவின் வெள்ளித்திரை பயணத்திற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.






