இந்தோனேசியாவில் கடும் மழை – 10 பேர் பலி, அவசர தங்குமிடங்கள் அமைப்பு!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மண்டேலிங் நடால் (Mandailing Natal) பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததில் 470 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், நியாஸ் தீவில் ( Nias island) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




