பிரித்தானியாவில் வரும் வாரத்திலும் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ள எச்சரிக்கை அமுலில்!
பிரித்தானியா முழுவதும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியதை தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 88 வெள்ள எச்சரிக்கைகள் அமுலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எச்சரிக்கைகள் தென்மேற்கு மற்றும் மிட்லாண்ட்ஸில் (Midlands) அமுற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஸ்காட்லாந்தில் நான்கு வெள்ள எச்சரிக்கைகள் அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அடுத்த வாரம் முழுவதும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. வேல்ஸின் சில பகுதிகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸில் 2026 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் மழை பெய்துள்ளதாகவும், இரு பகுதிகளும் வழக்கத்தை விட 50% அதிகமாக மழைப் பொழிவை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.





