பொழுதுபோக்கு

டேய் என்னடா பண்ணுற? ஐஸூவை பார்ட் பார்டாக வர்ணிக்கும் நிக்சன்

பிக்பாஸ் சீசன் 7ல் நிக்சனும், ஐஷுவும் முத்தம் கொடுத்துக்கொண்டதை சனம் ஷெட்டி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் முதலில் பங்கேற்றனர். அவர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, விஜய் வர்மா உள்ளிட்டோ எவிக்ட் செய்யப்பட்டனர். அதன் பிறகு வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் கானா பாலா, தினேஷ், அன்னபாரதி, அர்ச்சனா, டிஜே பிராவோ ஆகிய ஐந்து பேரும் உள்ளே வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் நிக்சனும், ஐஷுவும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்துக்கொண்டனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிலும் நிக்சனை தம்பி தம்பி என்று அழைத்து வந்த ஐஷு திடீரென அவரை தம்பி ஸ்தானத்திலிருந்து இறக்கி உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் நடந்துகொண்டதை பார்த்த ரசிகர்கள் ஆஹா இன்னொரு மருத்துவ முத்தம் விவகாரமோ என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.

https://twitter.com/MINIVK187/status/1718987609274462509

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி கூறுகையில்,

“நிக்சனை ஐஷு தம்பி தம்பி என சொல்லிவிட்டு அவருக்கு இப்போது முத்தம் கொடுப்பது கேவலமாக இருக்கிறது. அவர்களின் இந்த செயல் உறவு முறைகளையே கேவலப்படுத்துவது போன்று இருக்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக ஐஷு கொடுத்த முத்தத்தை அடுத்து நிக்சன் முத்தம் கொடுக்க வந்தபோது இதையெல்லாம் நீ ஏன் செஞ்ச என்று வீட்டில் கேட்டால் சேனல்தான் அப்படி செய்ய சொன்னாங்கனு சொல்லிடு என கூறியதை பார்த்த பலரும்; என்ன நிக்சன் பலே கில்லாடியா இருக்காரே என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

அதிலும் ஐஸூவை பார்ட் பார்டாக வர்ணிக்குமு் வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகின்றது…

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!