பொழுதுபோக்கு

கல்கியில் வந்த கிருஷ்ணர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க

கல்கி 2898 ஏடி படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வதாமாவாக நடித்துள்ள நிலையில், கிருஷ்ணராக நடித்த நடிகரின் முகத்தை படக்குழுவினர் வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அமிதாப் பச்சன் அஸ்வதாமாவாக நடித்துள்ள நிலையில், கிருஷ்ணராக நடித்த நடிகரின் முகத்தை படக்குழுவினர் வெளியிடவில்லை. பகவான கிருஷ்ணர் வரும் காட்சிகளில் அவரின் முகம் காட்டப்பட்டிருக்காது, ஷில்அவுட் காட்சிகளாகவே இருக்கும். எனவே கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணராக யார் நடித்தார் என்று கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

இந்த நிலையில் கிருஷ்னராக நடித்தது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை. பிரபல தமிழ் நடிகர் கிருஷ்ண குமார் தான். 2010 ஆம் ஆண்டு காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் நடித்த அவர், சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் தனுஷின் மாறன் படத்திலும் அவர் நடித்திருப்பார்.

இந்த நிலையில். கிருஷ்ண குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்கி 2898 ஏடி போன்ற ஒரு பெரிய படைப்பில் கிருஷ்ணரின் பாத்திரத்தில் நடித்ததற்கு நன்றியுள்ளவனாக இருப்பதாகக் பதிவிட்டுள்லார்.

மேலும் தனது கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content