இலங்கை

யாழ். கல்வியங்காடு பகுதியில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றையதினம் திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த உறவினர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 54வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content