கொண்ட்ரோல் இழக்கும் ஹரின் பெர்னாண்டோ
முன்னாள் சுற்றுலா அமைச்சர் திரு. ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஹரின் பெர்னாண்டோ எப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு குழுவினரை தூசன வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்கிறார் என்பதை இது காட்டுகிறது.
அதனையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், அவரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கவில்லை என குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)