கணவரைப் பிரிந்தார் நடிகை ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹல் கதுரியா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
ஹன்சிகா தனது விவாகரத்துக்கு பின்னர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹன்சிகா மோத்வானி தற்போது பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சோஹைல் கதுரியா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பல துறைகளில் செயல்பட்டு வருகிறார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இணைந்து தோன்றியிருந்தனர்.
இந்நிலையில், இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





