மேலும் 13 பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ள ஹமாஸ்

தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் 13 பணயக்கைதிகள் ஒப்படைக்கப்பட்டு இஸ்ரேலுக்குத் திரும்பி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்ட ஏழு கைதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது
எய்டன் ஆபிரகாம் மோர்(25), காலி பெர்மன்(28), ஜிவ் பெர்மன்(28),ஓம்ரி மீரான்(48),ஆலோன் ஓஹெல்(24),கை கில்போ-டலால்(24),மாடன் ஆங்ரெஸ்ட்(22) என்பவர்கள் ஆவர்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ள 1,718 பாலஸ்தீனியர்களின் பெயர்களையும் பாலஸ்தீன கைதிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)