காசாவில் போர் குற்றங்களை செய்த ஹமாஸ் – அம்னஸ்டி தெரிவிப்பு!
காசாவில் ஹமாஸ் அமைப்பினரும் போர் குற்றங்களை செய்துள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதல்களின் போது சர்வதேச மனிதாபிமான சட்டம், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தன” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 173 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 அன்று பொதுமக்களை பெருமளவில் கொன்றது “மனிதகுலத்திற்கு எதிரான அழிப்பு குற்றத்திற்கு” சமம் என்று அம்னஸ்டி கூறியுள்ளது.
ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள பிற பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள் “பணயக்கைதிகளை பிடித்து தவறாக நடத்துவதிலும், கைப்பற்றப்பட்ட உடல்களை வைத்திருப்பதிலும் குற்றங்களை இழைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
“பணயக்கைதிகளைப் பிடித்து வைத்தல் என்பது ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களின் தலைமையால் அறிவுறுத்தப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி எனவும் அந்த குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.





