ஜனநாயகன் படம் குறித்து ஹெச். வினோத் கொடுத்த அப்டேட்
முதல் முறையாக இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன்.
இது விஜய்யின் கடைசி படமாகும். அரசியல் பிரவேசம் காரணமாக சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார்.

இதனால் ஜனநாயகன் படத்தை திரையில் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இயக்குநரான ஹெச். வினோத், முதல் முறையாக படம் எப்படி வந்திருக்கிறது? ரசிகர்கள் எதை எதிர்பார்த்து படத்திற்கு வரலாம் என்பது குறித்து விழா மேடை ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில், “இது விஜய் சாரோட பக்கா Farewell படம். So, மாஸ், கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் இந்த மூன்று விஷயங்களை எதிர்பார்த்து வாங்க. இது கம்ப்ளீட் மீல்ஸ்-ஆ இருக்கும்” என கூறியுள்ளார்.





