குவாத்தமாலா சிறைக் கலவரம் – 43 காவலர்கள் பிணைக்கைதிகளாக பிடிப்பு, 09 பேர் பலி!
குவாத்தமாலா காவல்துறையினர் மீது சிறைக் கைதிகள் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 09 ஆக அதிகரித்துள்ளது.
மேற்படி சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ (Bernardo Arévalo) அவசரநிலையை பிறப்பித்திருந்தார்.
சிறைக்கைதிகள் ஒன்றிணைந்து 43 காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் மேற்படி கைதிகள் தங்கள் தலைவர்களுக்கு சலுகைகளை கோரியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று 30 நாள் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
குறித்த அறிவித்தலில் சந்தேகப்படும் பொதுமக்களை கைது செய்வதும் உள்ளடங்கும். அரசின் மேற்படி நடவடிக்கைக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





