‘கோல்டன் டோம்’ (Golden Dome) ஏவுகணை அமைப்பை உருவாக்க கிரீன்லாந்து தேவை – ட்ரம்ப்!
கிரீன்லாந்து, டென்மார்க் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
‘கோல்டன் டோம்’ (‘Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கு கிரீன்லாந்து முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பங்களிப்பு இல்லையென்றால் நேட்டா கூட்டணி பலம் மிக்கதாக இருக்காது எனவும் அவர் விமர்சித்துள்ளார். ஆகவே கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவதற்கான முயற்சியை நேட்டோ வழிநடத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
இதற்கிடையே கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் ஆர்வமாக இருந்தாலும் வெறும் 17 சதவீதமான அமெரிக்கர்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
தீவை வாங்குவதற்கு 700 பில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என்றும் இது அமெரிக்காவின் மொத்த வருடாந்திர பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தில் பாதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





