கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் எடுத்த திடீர் முடிவு…. காரணம் என்னவோ?

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன், கௌதம் கார்த்திக் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதுவும் முதல்படமே தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த மணிரத்னம் இயக்கத்தில் நடித்தார் கெளதம் கார்த்திக். கடல் என பெயரிடப்பட்ட அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
இதில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடிகை ராதாவின் மகள் துளசி நாயர் நடித்திருந்தார். அவரும் இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கடல் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. முதல் படமே தோல்வி அடைந்தால் அந்த ஹீரோவுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைப்பதும் அரிதான விஷயம் தான்.
அதையும் மீறி சில படங்களில் கெளதம் கார்த்திக் நடித்தாலும் அவருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்த கெளதம் கார்த்திக் அவரை கடந்த 2022-ம் ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் கெளதம் கார்த்திக்கிற்கு சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. அண்மையில் நடிகர் ஜெயம் ரவி கூட தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார்.
அந்த வகையில் நடிகர் கெளதம் கார்த்திக் தன் பெயரை கெளதம் ராம் கார்த்திக் என மாற்றி இருக்கிறார். இன்று வெளியாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் பட போஸ்டர் மூலம் அவர் பெயர் மாற்றியுள்ள தகவல் உறுதியாகி இருக்கிறது.
அதில் அவரது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என்று குறிப்பிட்டுள்ளனர். மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர் ஆகியோருடன் நடித்திருக்கிறார் கெளதம் ராம் கார்த்திக். எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் தான் மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்கி உள்ளார்.