அஜித் – தனுஷ் மோதல் உறுதியானது… எந்த படங்கள் தெரியுமா?
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் நாளில் தனுஷின் ‘இட்லி கடை’ படமும் வெளியாகிறது. இதனை நேற்றை தனுஷின் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்தது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அதேபோல, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள மற்றொரு திரைப்படமாக ‘குட் பேட் அக்லி’ வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜன.13) வெளியானது. இதில் ஒரு போஸ்டரில் வேஷ்டி, சட்டையுடன் அசல் கிராமத்து மனிதராக கன்றுக்குட்டியுடன் அமர்ந்திருக்கிறார் தனுஷ்.
மற்றொரு போஸ்டரில் பச்சை பசேல் என பயிர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் தனுஷும், நித்யாமேனனும் நின்றுகொண்டிருக்கின்றனர். இந்த போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த போஸ்டரில் படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும், தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது உறுதியாகியுள்ளது. முன்னதாக ஏப்ரல் வெளியீடாக கருதப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.