அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘மார்க் ஆண்டனி’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி வருகிறார். அஜித்தை பொறுத்தவரை ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்தார்.
இதில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பின்வாங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி இறுதியில் இந்தப் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.