பொழுதுபோக்கு

அஜித்தின் புதிய லுக்.. தல எப்படி இருக்கானு பார்த்துட்டீங்களா?

அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்துவிட்டது. படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு செய்யவேண்டி உள்ளது என கூறப்படுகின்றது. மீதம் உள்ள பாடலையும் படமாக்கிவிட்டால் படத்தின் ரிலீஸ் வேலைகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் லைகா நிறுவனம் உள்ளது.

அதேபோல் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றார். குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே படக்குழு திட்டமிட்டு வேகமாக செயல்பட்டு வருகின்றது.

படத்தினை மார்க் ஆண்டனி படத்தினை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகின்றார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கின்றார். ஏற்கனவே படக்குழு இரண்டுக்கும் மேற்பட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் புதிய லுக் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது.

மிகவும் தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித்தின் புதிய லுக்கினை படக்குழு வெளியிட்டுள்ளது.

See also  'மகாராஜா" விஜய் சேதுபதி கொடுக்கப் போகும் இன்ப அதிர்ச்சி

இந்நிலையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நியூ லுக்கில் அஜித்குமார் பக்காவான ஹாலிவுட் படத்தின் வில்லைனைப் போல் காட்சி அளிக்கின்றார் என அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படம் கட்டாயம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதால், விடாமுயற்சி படம் நவம்பர் மாதத்தின் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலே ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content