சூர்யாவின் ‘கருப்பு’ முதல் சிங்கிள் வெளியானது…

இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கலை இழந்த தீபாவளியாக இருக்கின்றது என்றால் அது உண்மைதான்.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த பெரிய தலைகளின் படங்களும் வெளிவரவில்லை. ஆனால் துருவ் விக்ரமின் பைசன், பிரதீப் ரங்கனாதனின் டியூட் மற்றும் ஹரிஸ் கல்யாணின் டீசல் போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.
இதில் டியூட் மற்றும் பைசனுக்குத்தான் போட்டிாக உள்ளது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் லியோ இரண்டு வருட கொண்டாட்டமாக லியோ மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றோரின் படங்கள் வெளியாகாத நிலையிலும், சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் த்ரிஷா, சுவாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.