22 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிய படம் தான் GOAT. இப்படம் ரசிகர்களுக்கு சிறந்த என்டர்டெய்மன்டாக வந்திருந்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸ் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். மேலும் 80ஸ் சினிமாவில் கலக்கிய மோகன் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் 22 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள GOAT திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை GOAT படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் கேரியரில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமும் இதுவே ஆகும். இதற்கு முன் வெளிவந்த லியோ படம் உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 56 times, 1 visits today)





