உலகளவில் திடீரென செயலிழந்த எக்ஸ் தளம் – குவிந்த முறைப்பபாடுகள்
உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட “எக்ஸ்” சமூக தளம் நேற்று ஒரு சில மணி நேரம் திடீரென செயலிழந்துள்ளது.
உலக கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ் (X)‘ சமூக வலைத்தளம் இன்று (புதன்கிழமை) காலை கிட்டத்தட்ட 1 மணி நேரம் செயலிழந்துள்ளது. இந்த செயலிழப்பு பிரச்சினையைச் சந்தித்த இலங்கை, இந்தியா மற்றும் அமெரிக்கா பயனர்கள் தங்கள் புகார்களைப் பிரபல ரிப்போர்ட்டிங் தளமான ‘டவுன்டெக்டரில்’ பகிர்ந்துள்ளனர்.
டவுன்டிடெக்டரில் பதிவான புகார்களில் பெரும்பாலான புகார்கள் இன்று காலை 8:47 க்குப் பிறகு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையை 20,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் சந்தித்துள்ளதாகவும், ஒரு சிலருக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அவர்களால் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலிழப்பைச் சந்தித்த பெரும்பாலான பயனர்களை தங்களது செயலிழப்பை உறுதி செய்வதற்குப் பிற சமூகத் தளமான ஃபேஸ்புக், ரெடிடிட் போன்றவற்றில் வேறு பயனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு உறுதி செய்துள்ளனர். இது தற்போது வரையில் முழுமையாகச் சரியாகவில்லை, இதற்கு என்ன காரணம் என்றும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு சிலருக்கு இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், ஒரு சிலருக்கு இந்த பிரச்னை ஒரு சில நிமிடங்களில் சீராகி உள்ளதாகக் கூறுகின்றனர்.
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான இந்த எக்ஸ் தளத்திற்கு இது சமீபத்திய செயலிழப்பாகும். ஆனால் இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்டதை போல மோசமாக இல்லை என இந்த பிரச்னையை சந்தித்து பிறகு சீரான பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த செயலிழப்பிற்கு என்ன காரணம், இந்த செயலிழப்புகள் பற்றிய கூடுதல் விவரங்கள் பற்றி “எக்ஸ்” தளம் விரைவில் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.