இலங்கை

இலங்கையில் திருமண நிகழ்வில் திடீர் மரணமடைந்த யுவதி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

ஹொரணை – பதுவிட்ட பிரதேசம், மெகொட உட கெவத்த பிரதேசத்தில் திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டு நண்பர்களுடன் நடனமாடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து யுவதி மேலும் இரு யுவதிகளுடன் அங்கிருந்து திடீரென வெளியேறியுள்ளார்.

அவர் சுகயீனமடைந்த நிலையில் ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது யுவதியை பரிசோதித்த அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரை ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்