காசா மருத்துவமனை வெடிவிபத்து: பிரான்ஸ் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்
காசா மருத்துவமனை வெடிவிபத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறியுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் உளவுத்துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன ராக்கெட் ஒன்று தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்ததுதான் வெடிவிபத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளது.
5 கிலோகிராம் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பாலஸ்தீன ராக்கெட் ஒன்று, தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்திருக்கத்தான் வாய்ப்புள்ளது என்றும், தான் கண்டுபிடித்துள்ள விடயங்கள் எதுவுமே, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை சுட்டிக்காட்டவில்லை என்றும் பிரான்ஸ் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது
(Visited 12 times, 1 visits today)





