மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

காஸா போர் நிறுத்த அறிவிப்பு – வீதிகளில் மக்கள் கொண்டாட்டம்

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர் நிறுத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 மாதங்களாக நீடிக்கும் போரில் பிணை பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 6 வாரங்களுக்குச் போர் நிறுத்தப்படும்.அதன் பிறகு காஸா வட்டாரத்திலிருந்து இஸ்ரேலியத் துருப்புகள் கட்டங்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள்.

கைதிகளின் பரிமாற்றமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாலஸ்தீன மக்கள் வீதிகளில் ஒன்றுகூடி கொண்டாடிவருகின்றனர்.
விளம்பரம்

கான் யூனிஸில் மக்கள் வீதிகளில் ஆரவாரம் செய்து மகிழ்கின்றனர். “மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆம், நான் அழுகிறேன். ஆனால் இது ஆனந்த கண்ணீர்” என்று போரில் வீட்டை இழந்து தவிக்கும் 5 பிள்ளைகளின் தாய் கூறினார்.

டெல் அவிவ் நகரில் இஸ்ரேலியப் பிணைக் கைதிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் சண்டை நிறுத்த அறிவிப்பைக் கொண்டாடுகின்றனர். “அன்புக்குரியவர்களின் வீடு திரும்பக் காத்திருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

சண்டை நிறுத்த உடன்பாடு குறித்து இஸ்ரேல் இன்னும் அதிகாரபூர்வத் தகவல்களை வெளியிடவில்லை. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகமும் அரசாங்கமும் அங்கீகரித்த பின்னரே அது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்