பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிலிப்பைன்ஸில் குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
சுமார் 50 துப்புரவுத் தொழிலாளர்கள் அதில் புதையுண்டிருந்த நிலையில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இன்றைய நிலவரப்படி 34 பேர் இன்னும் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை நோக்கிச் செல்லும்போது மேலும் இடிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டதாக களத்தில் பணியாற்றிய ஜோ ரெய்ஸ் தெரிவித்தார்.
இதன்காரணமாக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
பிலிப்பைன்ஸில் சரிந்து விழுந்த குப்பைக் கிடங்கு – 38 பேர் மாயம்!





