பிலிப்பைன்ஸில் சரிந்து விழுந்த குப்பைக் கிடங்கு – 38 பேர் மாயம்!

பிலிப்பைன்ஸில் குப்பைக் கிடங்கு ஒன்று  சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செபு நகரின் (Cebu ) பினாலிவ் (Binaliw) கிராமத்தில் இன்று  இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் 13 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், சுமார் 38 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிவில் பாதுகாப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.