இலங்கை செய்தி

கால்நடைகளைக் களவாடி இறைச்சியாக்கும் கும்பல்: கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்!

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழ். வேலணையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் இன்று முற்பகல் 10 மணியளவில் வேலணை வங்ககாவடியில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம்வரை சென்றது.

“வறிய பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே”

“சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு துணைநிற்போம்”

” வாழ்வாதாரத்தை பறிக்காதே”

“ஊர் கூடித் திருட்டை ஒழிப்போம்”
உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் பேரணியாக சென்றனர்.

பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர்.

இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கூறியவை வருமாறு,

“யாழ் மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் மாடு கடத்தல், இறைச்சியாக்கல பிரச்சினை இருக்கின்றது. எனினும், தீவகத்தில் இது பாரதூரமாக உருவெடுத்துள்ளது.

வேலணை பிரதேசத்தில் 420 இற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பண்ணையாளர்கள் இருக்கின்றனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் திருட்டுக் கும்பல்களால் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுவிட்டன.
.
அத்துடன் ஒட்டுமொத்த வேலணையை எடுத்துக்கொண்டால் அது 30 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் நல்லின கறவை மாடுகளும் அடங்கும்.” – என்று சுட்டிக்காட்டினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!