பிரம்மாண்டமும், அதிரடியும் இணைந்தால் இப்படித்தான் இருக்கும் – “கேம் சேஞ்சர்” ட்ரெய்லர்
நடிகர் ராம்சரண் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர்படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப்படத்தின் மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஷங்கர்.
படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்துள்ளது.
இதில் ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினர்பங்கேற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலியும் இணைந்து ட்ரெயிலரை வெளியிட்டுள்ளார்.
தில் ராஜு, சிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் மாஸ் செய்ய காத்திருக்கும் சூழலில், ட்ரெயிலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த ட்ரெயிலரில் ஷங்கருக்கே உரிய பிரம்மாண்டம், ராம்சரணுக்கே உரிய அதிரடி ஆகியவை இணைந்துள்ளன. கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா அனைவரும் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளனர்.