ஜெர்மனியில் பழத்தால் நேர்ந்த விபரீதம் – தீயணைப்புப் வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் துரியன் பழத்தின் வாடையை எரிவாயு கசிவென நினைத்து தீயணைப்புப் பிரிவிற்கு அழைத்த விநோத சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் நான்கு முறை தீயணைப்புப் பிரிவிற்கு அழைப்பு வந்தது.
விசித்திரமான துர்நாற்றமே அழைப்புகளுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆனால் எரிவாயுக் கசிவுக்கான எந்த அறிகுறியும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், அந்தக் கட்டடங்களில் எரிவாயு இணைப்புகளும் இல்லை எனத் தெரியவந்தது.
இறுதியாக, அந்த வாடைக்கு காரணம் எரிவாயுக் கசிவு அல்ல, பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும் துரியன் பழம் என்பதுதான் எனத் தெரியவந்தது.
கடைத்தொகுதியில் இருந்த காற்றோட்ட அமைப்புகள் மூலம், துரியன் பழத்தின் வாடை சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.