மீண்டும் ரீ-ரிலீஸாகும் ‘பிரண்ட்ஸ்’
தமிழ் திரையுலகில் பழைய படங்களை மீண்டும் தூசுதட்டி வெளியிடும் ரீ-ரிலீஸ் மோகம் எழுந்துள்ளது.
அந்த வகையில், தற்போ தளபதி விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்து மெகா ஹிட்டான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம், மீண்டும் நவம்பர் 21 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது.
விஜய், சூர்யா, வடிவேலு, தேவயாணி, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘பிரண்ட்ஸ்’. மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அண்மையில் கில்லி படம் வெளியாகி 50 கோடிகளை கடந்த நிலையில், அதே போன்று பிரண்ட்ஸ் படமும் கலெக்ஷன் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






