4 மாத குழந்தை படைத்த உலக சாதனை: நெகிழ்ச்சியில் பெற்றோர்கள்
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு கொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைவல்யாவின் தாய் ஹேமா, தனது குழந்தையின் சிறப்புத் திறனைக் கண்டு, அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் கைவல்யாவின் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோவை பதிவு செய்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பியுள்ளனர்.
வீடியோவை கவனமாகப் பார்த்து, கைவல்யாவின் திறமைகளைச் சோதித்த பிறகு, அவர் ஒரு சிறப்புச் சான்றிதழுக்கு தகுதியானவர் என்று முடிவு செய்தனர், மேலும் அவர் நான்கு மாதங்களில் உலக சாதனை படைத்தார்.
குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.