ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை (Shinzo Abe) கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் ஒருவருக்கு இன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
45 வயதான டெட்சுயா யமகாமி (Tetsuya Yamagami) என்ற நபருக்கே மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவர் ஜூலை 2022 இல் மேற்கு நகரமான நாராவில் (Nara) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வைத்து அபேயை கொலை செய்தாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான அபே, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





