ஒரு காலத்தில் சீரியல் நடிகை… இப்போ டாப் ஹீரோயின்

ஒரு காலத்தில் சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த இவர், மெதுவாக படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராகி இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவர்தான் மிருணாள் தாகூர்.
”குங்குமம் பாக்யா” சீரியல் மூலம் பிரபலமான மிருணாள் தாகூருக்கு, மெதுவாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த மிருணாள் தாகூர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ”விட்டி தண்டு” என்ற மராத்தி படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர் பாலிவுட் துறையில் நுழைந்தார். லவ் சோனியா, ஜெர்சி, சூப்பர் 30 போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார். அதன் பிறகு, 2022-ல் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
இந்தப் படம் அவரது கெரியரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.
தற்போது அவர் கையில் 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. மிருணாளின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடி வரை இருக்கும் என்றும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.