சிங்கப்பூரில் சிறுவனைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் – குவியும் பாராட்டுகள்
சிங்கப்பூரில் ஜன்னல் விளிம்பில் நின்றுகொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றிய இரு வெளிநாட்டு ஊழியர்களை நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 வயதுச் சிறுவன் கேன்பரா ரோட்டில் உள்ள புளோக் 350Cஇன் மூன்றாம் மாடி வீட்டுச் ஜன்னல் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான்.
அதனைக் கண்ட பங்களாதேஷ் ஊழியர் ஜாஹிரும் மியன்மாரைச் சேர்ந்த சா தூ யா அங்கும் சிறுவனைக் காப்பாற்றினர்.
இந்த நிலையில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அவர் பாராட்டித் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
“இரு வெளிநாட்டு ஊழியர்களும் விரைந்து சிறுவனைப் பத்திரமாக மீட்டெடுத்தனர். அந்தச் சம்பவம் விபரீதத்தில் முடிந்திருக்கலாம். எனினும் ஆபத்து எதுவும் நேரிடவில்லை. ஒரு குழந்தையை வளர்க்கக் கருணை உள்ளம் கொண்டவர்கள் உட்பட பல தரப்பினரின் பங்கும் முக்கியம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் Community Lifesaver விருது நேற்று வழங்கப்பட்டது.