கென்யாவின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் விமானப்படை பிரதானி நியமனம்..!

கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.அதாவது மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ வழங்கிவைத்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் விமானப் படையின் பிரதானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் ஃபாத்துமா நியமிக்கப்பட்டுள்ளார்.
கென்யாவின் இராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இது கருதப்படுகின்றது.
இந்த நியமனம் மூலம் மேஜர் ஜெனரல் ஃபதுமா கைதி அகமது கென்யாவின் விமானப்படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.
(Visited 24 times, 1 visits today)