வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5000 அவுன்ஸுக்கு மேல் உயர்வு!
தங்கத்தின் விலை முதன்முறையாக ஒரு அவுன்ஸ் $5,000 (£3,659) க்கு மேல் உயர்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் பெறுமதி 60 சதவீத்திற்கு மேல் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதட்டங்கள் நிதி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை பெறுமதியான உலோகங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய பங்களிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளும் சந்தைகளை கவலையடையச் செய்துள்ளன.
தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் வாங்கும் பாதுகாப்பான சொத்தாக கருதப்படுவதும் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும்.





