வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை!
“சாத்தியமான அபாயகரமான சூழ்நிலை” காரணமாக வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் (FAA) தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பு அனைத்து அமெரிக்க விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க குடிமக்கள் வெனிசுலாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதேநேர் வெனிசுலாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரஜைகள் அங்கேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 3 முதல் வெனிசுலா மிக உயர்ந்த பயண ஆலோசனை மட்டத்தில் இருப்பதாக கொலம்பியாவின் போகோட்டாவில் (Bogota) உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்





