உக்ரைன்-டினிப்ரோவில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் ஐந்து பேர் பலி
தென்கிழக்கு உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும்பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் காயமடைந்தவர்களில் 14 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
தாக்குதலில் குறைந்தது 53 பேர் காயமடைந்தனர் மற்றும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி லிசாக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் அல்லது குடிமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பதை ரஷ்யா மறுக்கிறது. பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீதான முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
“இந்த ரஷ்ய பயங்கரவாதத்தை நவீன வான் பாதுகாப்பு மற்றும் நமது நீண்ட தூர ஆயுதங்களால் மட்டுமே நிறுத்த முடியும்” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
நகரின் மேயரான போரிஸ் ஃபிலடோவ், வியாழன் அன்று ஒரு நாள் துக்கத்தை அறிவித்தார்.