செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க குடியிருப்பில் தீவிபத்து – இந்திய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த நபர் பாசில் கான் என்ற 27 வயதுடையவர் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று உள்ளது.

இதில், திடீரென லித்தியம் பேட்டரி ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கட்டிடம் முழுவதும் தீப்பற்றி பரவியது. இதனால், அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பியோடினர்.

இதில், 17 பேர் வரை காயமடைந்த நிலையில் இந்திய இளைஞரான பாசில் கான் என்பவர் உயிரிழந்தார். இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த தீவிபத்து குறித்து காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நியூயார்க் நகர தீயணைப்புத் துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2023-இல் மட்டும் லித்தியம்-அயன் பேட்டரிகள் காரணமாக நகரத்தில் 267 தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக 150 பேர் காயமடைந்ததாகவும், 18 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!