அடுத்து வரும் நாட்களில் உக்கிர தாக்குதல்: இஸ்ரேல் எச்சரிக்கை!
ஈரான்மீதான தாக்குதல் அடுத்துவரும் நாட்களில் உக்கிரமடையும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையிலேயே இஸ்ரேல் தரப்பில் இருந்து மேற்கண்டவாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் – அமெரிக்க கூட்டுத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை பிரிட்டன் கண்டித்துள்ளது.
ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டியாகோ கார்சியா விமானத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல், அந்த நாடு மிக அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





