காசாவில் 101 பேரின் உயிரை பறித்த பட்டினி – ஐ.நா அதிர்ச்சி தகவல்

காசாவில் நிலவும் தீவிர பட்டினி காரணமாக, இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்திலேயே மட்டும், 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு பட்டினிக்குள்ளாக்கும் தந்திரங்களை இஸ்ரேல் அரசு பயன்படுத்திவருகிறது எனக் குற்றம்சாட்டி, நியூயார்க் நகரில் பலர் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது எனவும், அதனைப் பொருத்து அமெரிக்க அரசையும் விமர்சித்தனர்.
(Visited 3 times, 1 visits today)