காசாவில் அடையாளங்களின்றி சடலங்களை குவித்த இஸ்ரேல்
இஸ்ரேல் காசாவிற்கு பல பலஸ்தீனியர்களின் சடலங்களை அனுப்பியுள்ளதாக பலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சடலங்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதற்கான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 54 உடல்கள் கொண்ட 120 பைகள் மற்றும் 66 தனித்தனி மண்டை ஓடு மாதிரிகளையும் ஒப்படைத்தாக
தடயவியல் அதிகாரி உமர் சுலைமான் தெரிவித்துள்ளார்.
கடந்த பரிமாற்றங்களில், பல உடல்கள் சிதைந்து, காயம் அடைந்த நிலையில் காணப்பட்டதுடன், துஷ்பிரயோகம் மற்றும் மரணதண்டனைக்கான அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சித்திரவதை, மருத்துவ புறக்கணிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் தாக்குதல் போன்ற காரணங்களால் சுமார் 94 பலஸ்தீனிய கைதிகள் உயிரிழந்ததாக மனித உரிமை மருத்துவர்கள் குழு (Physicians for Human Rights-Israel) நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மையான எண்ணிக்கை இதைவிட கூட அதிகமாக இருக்கலாம் என்று குழு எச்சரித்துள்ளது.





