கடவுச்சீட்டுடன் எதிஹாட் விமானத்தில் பயணித்த பருந்து – ஆச்சரியத்தில் பயணிகள்
மொரோக்கோவுக்குச் சென்ற நபர் அவருடைய பருந்தை எதிஹாட் விமானத்தில் எடுத்துச்சென்றது மக்களை வியக்கவைத்துள்ளார்.
அந்த பருந்துக்கு கடவுச்சீட்டும் உள்ளது. அந்தப் பருந்து ஸ்பெயினைச் சேர்ந்த ஆண் பருந்து என தெரியவந்துள்ளது.
மேலும் வேறு எந்தெந்த நாடுகளுக்குப் பருந்து சென்றிருக்கிறது என்ற தகவலும் கடவுச்சீட்டில் உள்ளது.
“பறவை நான் சென்ற நாடுகளை விட அதிகமான நாடுகளுக்குச் சென்றிருக்கிறது” என விமான பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விலங்குகளுக்கு இப்படித்தான் மரியாதை செலுத்தவேண்டும் என மற்றுமொருவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு சிலர் பறவைகளுக்குக் கடவுச்சீட்டா என ஆச்சரியமைந்துள்ளனர். சமூக ஊடகத்தில் இந்தச் செய்தி வைரலாகியுள்ளது.





