அரசியல் இலங்கை செய்தி

ராஜபக்சக்களை தோற்கடிக்க போலி பிரச்சாரம்: நாமல் கொதிப்பு!

“ வடக்கு, கிழக்கு மக்களைப் பற்றி அதிகம் கதைக்கும் இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார்.

“வடக்கு, கிழக்குபோலவே தெற்கிலும் தற்போது ஆளுநர்கள் ஊடாகவே நிர்வாகம் இடம்பெறுகின்றது. ஆளுநர்களின் தேவைக்கேற்ப நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனநாயகம் பற்றி கோஷம் எழுப்பும் இந்த அரசாங்கம், மாகாணசபை விடயத்திலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்.

அதேவேளை, 2015 இல் ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்காக ஜே.வி.பி. பொய்கூறும் அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்தது. நாம் அவ்வாறான அரசியலில் ஈடுபடமாட்டோம் ” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!