அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாகின்றது
அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
நியூயார்க், கலிஃபோ IA, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாபயமாக்கப்பட்டுள்ளது.
கோவிட், சளி மற்றும் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 17 முதல் 23 வரையிலான வாரத்தில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





