அமெரிக்காவில் அரிய வகை ஒட்டகச்சிவிங்கி – பார்வையிட குவியும் மக்கள்
அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் அரிய ஒட்டகச்சிவிங்கி பிறந்துள்ளது.
புள்ளிகளே இல்லாமல் பிறந்திருப்பதே இந்த ஒட்டகச்சிவிங்கியின் சிறப்பு அம்சமாகும். கடந்த மாதம் 31ஆம் தேதி Bright விலங்குத் தோட்டத்தில் பிறந்த அது தற்போது 6 அடி உயரம்.
அந்தப் பெண் ஒட்டகச்சிவிங்கியின் உடல் பழுப்பு நிறத்தில் உள்ளது. 1972ஆம் ஆண்டு ஜப்பானில் புள்ளிகளே இல்லாத ஒட்டகச்சிவிங்கி ஒன்று பிறந்தது.
அதன் பின்னர் அத்தகைய ஒட்டகச்சிவிங்கி அமெரிக்காவில் பிறந்திருப்பதாக நம்பப்படுகிறது. அதன் பெயர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
தாயின் பராமரிப்பிலும் விலங்குத் தோட்டத்தின் ஊழியர்களின் பராமரிப்பிலும் அது நன்கு வளர்வதாகத் தோட்டம் கூறியது. அதனை பார்வையிடுவதற்கு மக்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஒட்டகச்சிவிங்கியின் உரோமத்தில் இருக்கும் புள்ளிகள் காடுகளில் அவை மறைந்திருக்க உதவுகின்றன.