சிங்கப்பூரில் கடும் வெப்பம் – பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சிங்கப்பூரில் வெப்பமான வானிலையின்போது மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கல்வி அமைச்சும் பாடசாலை கூடுதல் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கல்வி அமைச்சர் Chan Chun Sing தெரிவித்துள்ளார்.
வகுப்பறைப் பாடங்களுக்கும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவை ஒட்டுமொத்த அரசாங்க ஆலோசனைகளுக்கு ஏற்ப இருப்பதாக அவர் கூறினார்.
அண்மையில் வெப்பநிலையும் புறஊதாக் கதிர்கள் குறியீடும் மிதமிஞ்சி உயர்ந்ததைப் பொத்தோங் பாசிர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Sitoh Yih Pin சுட்டினார்.
அதனால் வெளிப்புற நடவடிக்கைகளின்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கூடுதல் நடவடிக்கைகளைச் எடுக்கக் கல்வி அமைச்சு திட்டமிடுகிறதா என்று யீ பின் நாடாளுமன்றத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் சான் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார். அனல்காற்று ஏற்பட்டால் பள்ளிகளில் கூடுதலான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
உதாரணத்திற்கு வட்டாரத்தின் வெப்பக் குறியீடுகளைக் கவனித்து அதற்கேற்பப் பாடசாலைகள் அவற்றின் வெளிப்புற நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கைகளின் தீவிரம் குறைக்கப்படலாம், வெப்பம் தணிந்த பின் அவை மேற்கொள்ளப்படலாம் அல்லது அவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்படலாம் என்று அமைச்சர் சான் கூறினார்.