பிரேசிலை உலுக்கிய கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி 90 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தெற்குப் பகுதிகளை கடும் மழை உலுக்கியுள்ளது.
அங்கு பெய்த பெருமழையால் ரியோ கிராண்ட் சுல் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர்.
கட்டிடங்களின் மேற்கூரையில் தஞ்சமடைந்திருக்கும் ஏராளமானோர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
போர்ட்டோ அல்க்ரேவில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்டொராடோ சுல் பகுதிகளில் பலர் வீடிழந்து சாலையோர பிளாட்பாரங்களில் தங்கியபடி உணவுக்காக காத்திருக்கின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க குறுகிய தெருக்களில் படகுகளில் மீட்புப் படையினர் சென்று வீடு வீடாக தேடி வருவதுடன் ஹெலிகாப்டரிலும் தேடுதல் பணி நடக்கிறது.
(Visited 32 times, 1 visits today)